வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததன் காரணமாக தென் மாநிலங்களுக்கு கனமழை முதல் அதீத கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதன்படி, ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு அதீத கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், ராயலசீனா பகுதிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒடிசா-சத்தீஸ்கர் ஆகிய இடங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னை, கடலூர், நாகை, பாம்பன், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Night
Day