வங்கதேச வன்முறை - பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் அரசு இட ஒதுக்கீட்டு தொடர்பான போராட்டத்தின்போது வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கடந்த 2018ம் ஆண்டு வங்கதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இதனை தற்போதைய வங்கதேச அரசு மீண்டும் நடைமுறைபடுத்தியதால் நாட்டில் கடந்த சில வாரங்களாக கலவரம் வெடித்து வருகிறது. இதனால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கலவரக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 197 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து போராட்டம் நீடித்து வருவதால், உயிரிழப்போரின் எண்ணிக்கை 200க்கும் மேல் தாண்டும் என அஞ்சப்படுகிறது.

Night
Day