வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2024 - 2025ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, பிற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவிகிதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day