வங்க கடலில் பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின் போது, மூழ்கடிக்கப்ட்ட பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல் பி.என்.எஸ். காஜியின் சிதைந்த பாகங்கள் விசாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரின் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல், பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பலான, பி.என்.எஸ். காஜியை மூழ்கடித்தது. ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை சிதைக்க பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி கப்பலான பி.என். எஸ். காஜியை, விசாகப்பட்டினம் அருகே அடையாளம் கண்ட இந்திய கடற்படை வெற்றிகரமாக அதை கடலில் மூழ்கடித்தது. தற்போது அதன் சிதைந்த பாகங்கள் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் 100 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் ஆழமான நீர்மூழ்கி மீட்பு வாகனத்தின் ஆய்வில் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day