வடஇந்தியாவின் காற்று மாசு 'தேசிய அவசர நிலை'-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வட இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு 'தேசிய அவசரநிலை' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

இது தொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் விம்லேந்து ஜாவுடன் விவாதிக்கும் வீடியோவை X தளத்தில் பகிர்ந்துள்ள அவர், காற்று மாசுபாட்டை பொது சுகாதாரம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் பொருளாதார நெருக்கடி எனக் கூறியுள்ளார். சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் போராடுவது, உலகளாவிய நற்பெயரைக் குறைப்பதுடன் சுற்றுலா மற்றும் ஏழைகளை மிகவும் பாதிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பல்வேறு துறைகளில் இருந்து தீர்க்கமான நடவடிக்கைக்கான அவசரத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் எம்.பி.க்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

varient
Night
Day