வடமாநிலங்களில் இரண்டாம் நாளாக களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில் வண்ணப்பொடிகளை தூவி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இரண்டாவது நாளாக ஹோலி பண்டிகை களைகட்டியது. முக்கிய வீதிகளில் குவிந்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும் தண்ணீரை பீய்ச்சியடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராய்ப்பூரில் ஒன்றுக்கூடிய காவலர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணபொடிகளை தூவியும், பாடல்கள் பாடி நடனமாடி ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் பிரசாத் ஹரிசந்தன் ஏற்பாட்டில் பார்வையற்ற மாணவர்கள் பள்ளியில் ஹோலி பண்டிகை களைகட்டியது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு நெகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா ​​தனது வீட்டில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார். அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசியும், மலர் தூவியும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

Night
Day