வயநாடு இடைத்தேர்தல் - பிரியங்கா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலோடு வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதன்படி, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது. இதனையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரியங்கா காந்தி தனது தாய் சோனியா காந்தியுடன் நேற்று இரவு வயநாட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரம்மாண்ட பேரணியாக வந்த பிரியங்கா காந்தி, வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Night
Day