வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு தொகுதி எம்பி பொறுப்பை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலுமே ராகுல்காந்தி வெற்றி பெற்றார். இதில் எந்த தொகுதியை ராகுல்காந்தி ராஜினாமா செய்வார் என்று கேள்வி எழுந்து வந்தநிலையில், இது தொடர்பாக விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதன்பின் கார்கே, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்ய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய ராகுல், வயநாடு தொகுதிக்கும், தனக்கும் இடையிலான உறவு உணர்வுபூர்வமானது என்றும், வயநாடு தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நிற்பேன் என்றும் தெரிவித்தார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும்,  இந்த தேர்தல் போரில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் கூறினார்.

Night
Day