வயநாடு நிலச்சரிவு இதயத்தை நொறுக்கும் பேரழிவு : கேரள முதல்வர் பினராயி விஜயன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இதயத்தை நொறுக்கும் பேரழிவு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் வயநாடு, மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிலச்சரிவால் சூரல்மலை, மேலப்பாடி, முண்டக்கை பகுதிகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாகவும், சம்பந்தப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் குழு, முகாமிட்டுள்ளதாகவும் கூறினார். நிலச்சரிவில் சிக்கி மீட்கப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 118 நிவாரணம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் பினராய் விஜயன், தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், அதிகாலை 2 மற்றும் 4.30 மணிக்கு அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறினார். மோப்பநாய் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்த சடலங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், தற்காலிக பிணவறை அமைக்கப்பட்டு உடல்களை விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்ததே நிலச்சரிவுக்கு காரணம் எனவும் முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார்.

Night
Day