வயநாடு நிலச்சரிவு - ஆய்வு கூட்டத்தில் பிரதமர் உரை

எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவு ஏராளமானோரின் கனவை சிதைத்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த நிலச்சரிவு சாதாரணமானது அல்லது என்றும், அசாதாரணமான மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்டுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலமாகவும், நடந்து சென்றும் பார்வையிட்ட அவர், நிவாரண முகாம்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் பேசிய பிரதமர் மோடி, சம்பவம் நடந்த அன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு, தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்ததாக கூறினார். உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், கேரள அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் மோடி கூறினார். ராணுவத்தினர், பேரிடர் மீட்பு படையினர், காவலர்கள், மருத்துவர்கன், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். நிலச்சரிவு ஏராளமான குடும்பங்களின் கனவுகளை சிதைத்து விட்டதாக கூறிய அவர், இந்த நிலச்சரிவு சாதாரணமானது அல்ல என்றும், அசாதாரணமான மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு என்றும் பிரதமர் மோடி கூறினார். 

Night
Day