எழுத்தின் அளவு: அ+ அ- அ
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் தவிக்கும் நிலையில், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து தர வேண்டுமென வலியுறுத்தினார்.
தொடர்ந்து, கேரளாவிற்கு பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இயற்கை பேரிடர்களுக்கு தீர்வு காண்பதற்கான விரிவான செயல் திட்டம் தேவை என்று கோரிய ராகுல் காந்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.