வயநாட்டில் நிலச்சரிவு : அடையாளம் காண முடியாத உடல்கள் எரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொடர்ந்து ஏழாவது நாளாக மீட்புப் பணி இன்று நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மீட்புப் படையினர் கண்டெடுத்த 31 அடையாளம் தெரியாத உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது. இந்நிலையில் நிலச்சரிவின்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்ததாக அறியப்பட்டிருக்கும் 180 பேரின் நிலைமை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. வீடுகளுக்குள் சென்று திருட்டுச் சம்பவங்கள் நடைபெறலாம் என்பதற்காக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்குள் பொது மக்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று சூரல்மலை மற்றும் முண்டகை இடையே ட்ரோன்கள் மூலம் தேடி மண்ணுக்குள் புதைந்திருந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.  மேலும் 4 மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே காசர்கோடு, கன்னூர், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழை, எர்ணாகுளம் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day