வரலாறு காணாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பிரதமர் மோடி 3வது முறையாக பதிவியேற்றதையடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 339 புள்ளிகள் அதிகரித்து 79 ஆயிரத்து 013 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97 புள்ளிகள் அதிகரித்து 23 ஆயிரத்து 966 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக அல்ட்ராடெக் சிமென்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. 

Night
Day