எழுத்தின் அளவு: அ+ அ- அ
வாரத்தின் தொடக்க நாளிலேயே இந்திய பங்குசந்தைகள் கடும் விழ்ச்சியை சந்தித்து வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பின் காரணமாக ஆசிய மற்றும் இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை 350 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்நிலையில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு 3 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 72 ஆயிரத்து 122 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குசந்தை நிஃப்டி ஆயிரத்து 16 புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்து 887 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குசந்தை முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததால், 13 முக்கிய துறை குறியீடுகளும் சரிவில் வர்த்தகமாகின்றன. ஐடி துறையை சேர்ந்த நிறுவனங்கள், இரும்பு சார்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் சரிவை சந்தித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பின் காரணமாக முதலீட்டாளர்களிடையே நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளதாக பங்குசந்தை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.