வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் வருகிற பருவமழை காலத்தில், இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1951 முதல் 2023 வரையிலான தரவுகளை கணக்கில் கொண்டு, வருகிற பருவ காலத்தில், சராசரியாக 87 செண்டிமீட்டரில் 106 சதவீதம் மழை பெய்யும் என மதிப்பிட்டுள்ளது. மேலும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Night
Day