வருமான வரி விலக்கு உச்சவரம்பு விகதிதத்தில் எந்த மாற்றமில்லை -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை... ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச சூரிய சக்தி மின்சாரம் கிடைக்கும் வகையில் சோலார் மின்திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புழக்கத்தில் உள்ள 40ஆயிரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் தரத்துக்கு தரம் உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.

நாட்டின் விமான நிலையங்கள் இரட்டிப்பாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆயிரம் புதிய விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட்கள் மின்சாரம் பெரும் வகையில் வீட்டில் மேற்கூரையில் சோலார் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி பேருக்கு 22.5 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

திறன் இந்தியா திட்டம் மூலம் 1.4 கோடி இளைஞர்கள் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர், 54 லட்சம் இளைஞர்களின் திறன் ஊக்குவிப்பு செய்யப்பட்டதாகவும், நாடு முழுவதும் 3ஆயிரம் புதிய ஐ.டி.ஐ.க்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 7 ஐ.ஐ.டி.க்கள், 16 ஐ.ஐ.ஐ.டி.க்கள், 7 ஐ.ஐ.எம்.கள், 15 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள், 390 பல்கலைக்கழகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day