எழுத்தின் அளவு: அ+ அ- அ
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம், டெல்லியில் வரும் 21-ம் தேதி ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது.
கடந்த 30ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு 2 புள்ளி 5 டிஎம்சி நீரை வழங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை வழங்கியிருந்தது. இந்நிலையில், டெல்லியில் வரும் 21ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் தலைவர் எஸ்கே ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் மீண்டும் நாளை மறுதினம் நடைபெற உள்ளதாக, அதன் தலைவர் வினித் குப்தா தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு முன்பு காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறவுள்ளதால், தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்க பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.