வரும் 25-ம் தேதிக்குள் டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 25-ம் தேதிக்குள் டெல்லியில் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி மாசு இல்லாத சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்றும் எந்த மதமும் மாசுபாட்டை ஊக்குவிக்கும் அல்லது மக்களின் ஆரோக்கியத்துடன் சமரசம் செய்யும் செயலை ஊக்குவிப்பதில்லை என நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு குறிப்பிட்டுள்ளது. வரும் அக்டோபர் 14-ம் தேதி டெல்லி அரசு பிறப்பித்த தடை குறித்து அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து டெல்லி காவல் ஆணையர் வரும் 25ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.   

Night
Day