வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 சதவீதமாக குறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக, நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்களின் நுகர்வு இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாகவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டதாகவும் கூறினார். இந்த கணக்கெடுப்பு முடிவுகள் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும், அரசின் இலவச திட்டங்களால் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார். நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சி இடைவெளி 84 சதவீதத்தில் 71 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும்  அவர் தெரிவித்தார். 

Night
Day