வல்சாத் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 15-க்கும் மேற்பட்ட குப்பை கிடங்குகள் எரிந்து சாம்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15க்கும் மேற்பட்ட குப்பை கிடங்குகள் எரிந்து சாம்பலானது. 


வல்சாத் மாவட்டத்தின் வாபி பகுதியில் விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்ட குப்பை கிடங்குகள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். இதனிடைய தீ விபத்திற்கான காரணம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றும், தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Night
Day