எழுத்தின் அளவு: அ+ அ- அ
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். என் அன்பான குடும்ப உறுப்பினர்களே" என குறிப்பிட்டு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சட்டப்பிரிவு 370 ரத்து, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்ட சில வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை பட்டியலிட்டுள்ளார். 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும் , ஆதரவும் தமக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமே தனது அரசின் மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்துள்ளார். மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவே, பல்வேறு திட்டங்கள் எல்லாம் வெற்றி கண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தின் அழகு என்பது மக்களின் பங்கேற்பில் தான் உள்ளது என்றும், தேசத்தின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கவும், லட்சிய திட்டங்களை வகுக்கவும், அவற்றை சுமுகமாக செயல்படுத்தவும் மக்களின் ஆதரவு வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.