வளா்ந்து வரும் இந்தியா : பிரதமரின் பள்ளிகள் திட்டத்தில் சேராத தமிழ்நாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் என்ற பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இணையாததற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் 14 ஆயிரத்து 500 பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கவும், மற்ற கல்வி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் நோக்கத்திலும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் நிதியைப் பெற்றுக் கொண்டும் தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், கேரளம், டெல்லி ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையவில்லை. இத்திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும் பஞ்சாப் மாநிலம் இதை அமல்படுத்தவில்லை. 

Night
Day