வாகனங்கள் வரத்தை குறைக்க நெரிசல் வரி விதிக்க டெல்லி அரசு முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தலைநகரில் பீக் ஹவர்ஸ் எனப்படும் போக்குவரத்து அதிகமுள்ள நேரத்தில், வாகனங்கள் வரத்தை குறைக்கும் வகையில் நெரிசல் வரி விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான 13 முக்கிய இடங்களையும் கண்டறிந்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் நெரிசல் வரி விதிப்பு என்பது புதிய திட்டமல்ல எனக் கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டில் இதேபோன்ற திட்டம் விவாதிக்கப்பட்டு, அப்போதைய துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், பீக் ஹவர்ஸில் நுழையும் வாகனங்களுக்கு நெரிசல் வரி விதிக்க முன்மொழிந்தார். தற்போது இந்த திட்டம் அமலுக்கு வந்தால், தொடர்ந்து சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களிலும் நெரிசல் வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day