வாக்களித்த திரை நட்சத்திரங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் நடைபெறும் தெலங்கானாவில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது வாக்கை பதிவு செய்தார். ஐதராபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஜனநாயக கடமை ஆற்றிய பின்னர் பேட்டியளித்த அவர், இந்த நாள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள் என்று கூறினார்.

தெலங்கானா மக்களவை தேர்தலில் ஐதராபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் ஜூனியர் என்டிஆர் வரிசையில் நின்று வாக்களித்தார். குடும்பத்துடன் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த அவர், தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் மூலம், எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு நல்ல செய்தியை நாம் அளிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். 

Night
Day