வாக்காளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத் பெயர் நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் டேராடூனில் வாக்களிக்கச் சென்ற போது அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 2009 முதல் டேராடூனின் நிரஞ்சன்பூரில் வாக்களித்து வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதிலும் நீக்குவதிலும் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை அறிந்து இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார். 

Night
Day