வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். தெலங்கானா மாநிலம் செகந்திராபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சுதந்திரம் பெற்றதில் இருந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் வாக்குறுதி என சுட்டிக்காட்டினார். ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக, காங்கிரஸ் கட்சி சிஏஏ சட்டத்தை எதிர்த்ததாக குற்றம்சாட்டினார். அந்த 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த லட்சக்கணக்காண மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் இருந்ததாகவும், தற்போது பிரதமர் நரேந்திர மோடி அந்த மக்களை கவுரவித்துள்ளதாகவும் பாராட்டினார்.

varient
Night
Day