வாரணாசியில் பூசாரிகள் போல் காவி உடை அணிந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், பூசாரிகள் போல காவி உடை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பிரபல வழிபாட்டு தலங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து செல்வது வழக்கம். இந்தச் சூழலில், இக்கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் உள்ள போலீசார் தற்போது காவி உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். சில நேரங்களில் போலீசார் தங்களை வலுக்கட்டாயமாக தள்ளுவதாக புகார் தெரிவிக்கும் பக்தர்கள், பூசாரிகள் அதனை சொன்னால் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்காகவே இந்த ஏற்பாடு என உத்தரபிரதேச காவல்துறை இதற்கு வித்தியாச விளக்கம் அளித்துள்ளது.

Night
Day