வால்மீகி கார்ப்பரேஷன் ஊழலில் கர்நாடக முதலமைச்சரை சிக்க வைக்க முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வால்மீகி கார்ப்பரேஷன் ஊழலில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, பெயரை குறிப்பிடுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாக அரசு அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 187 கோடி ரூபாய் வால்மீகி கார்ப்பரேஷன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வால்மீகி கார்ப்பரேஷன் ஊழலில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சரின் பெயர்களை குறிப்பிடுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாக சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் கல்லேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் 2 அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day