விசாகப்பட்டினத்தில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட மிதக்கும் பாலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திறந்து வைக்கப்பட்ட மிதக்கும் பாலம், சிறிது நேரத்திலேயே ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டது. விசாகப்பட்டினம் ஆர்.கே.கடற்கரையில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. இதனை எம்.பி ஒய்.வி. சுப்பா ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் நேற்று திறந்து வைத்தனர். பாலம் திறந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பலத்த காற்று வீசியது. ராட்சத அலை ஏற்பட்டதில், பாலம் தனித்தனியே கடலில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

Night
Day