விண்வெளியிலிருந்து பூமியை எடுத்த புகைப்படம் இஸ்ரோ வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விண்ணில் செலுத்தப்பட்ட இன்சாட் 3 DS செயற்கைக்கோள் வானிலை ஆராய்ச்சிக்கு தேவையான தரவுகளை பூமிக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ சார்பில் கடந்த மாதம் ஜி.எஸ்.எல்.வி F 14 ராக்கெட் மூலம் இன்சாட் 3 DS செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த செயற்கைக்கோள் வானிலை கணிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காகவும், பேரிடர் காலத்தில் கடலில் தொலைந்தவர்களை தேடும் பணியில் உதவுவதற்காகவும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த செயற்கைக்கோள் விண்வெளியிலிருந்து பூமியையும், இந்தியாவின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளது. இந்த தரவுகள் இந்திய வானிலை ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Night
Day