விண்வெளி துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விண்வெளி துறையில் நூறு சதவீத நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் விண்கலத்தை இறக்கி சாதனை படைத்த இந்தியா, விண்வெளித்துறைக்கான முதலீட்டை அதிகரிக்கும் வகையில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அந்நிய நாடுகளின் முதலீடு அதிகரித்து நாட்டில் போதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்பேக் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் நேரடியாக இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்களை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒட்டுமொத்த விண்வெளி பொருளாதாரத்தில் 2 சதவீத பொருளாதாரத்தை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day