விரைவில் அதிவேக இணைய சேவையை வழங்க உள்ளது ஜியோ நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் இந்தியாவில் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

ஸ்டார் லிங்க் என்ற நிறுவனம் மூலம் சிக்னல் இல்லாத இடங்களிலும் செயற்கைக்கோள் உதவியுடன் சிக்னல் வழங்கி வரும் எலான் மஸ்க், இதனை இந்தியாவில் தொடங்குவதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஏர்டெல் நிறுவனத்துடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தற்போது ஜியோ நிறுவனத்துடனும் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் தொலைதூர கிராமங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளின் அதிவேக இணைய சேவையை இரு நிறுவனங்களும் வழங்க உள்ளன.

Night
Day