விரைவில் ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் - அஷ்வினி வைஷ்ணவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்லீப்பர் வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அடுத்த ஆறு மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 16 பெட்டிகளை கொண்ட இவ்வகை ரயில்கள் விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்படும் என கூறியுள்ளார். மேலும் தற்போது உள்ள ரயில்களின் உயரம் குறைவாக இருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாவதாக தெரிவிப்பதாகவும், ஆதலால் வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகள் மிக உயரத்துடன் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இவை சுமார் 10 கோடி ரூபாய் செலவில் ஒவ்வொரு பெட்டிகளும் தரமானதாகவும், அதில் 67 பயணிகள் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அஷ்வினி வைஷ்ணவர் கூறினார்.

varient
Night
Day