விளம்பர திமுக எம்.பி.க்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஊழல்களையும் முறைகேடுகளையும் மறைக்கவே மொழியின் பெயரால் அரசியல் செய்கின்றனர் என்று விளம்பர திமுக மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை, தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக விளம்பர திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்து மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளம்பர திமுக-வை கடுமையாக சாடினார்.

அப்போது பேசிய அவர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க திமுக-வுக்கு தைரியம் இல்லை என்றும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், ​​மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் கூறினார்.

விளம்பர திமுக அரசு, பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், ஊழலை மறைக்க மொழியின் பெயரில்  திமுக அரசியல் செய்கிறது என்றும் சாடிய அமித் ஷா, இந்தி எந்த தேசிய மொழியுடனும் போட்டியிடவில்லை என்றும், இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு துணை மொழி என்றும் கூறினார்,

டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, குடிமக்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் தாய் மொழியில் கடிதப் போக்குவரத்து நடத்தவுள்ளதாக கூறிய அமித் ஷா, ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இதுவே தனது பதில் என்றும் அவர் தெரிவித்தார்.

Night
Day