விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஒரு வயது சிங்கக் குட்டி மீட்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஒரு வயது சிங்கக் குட்டி நீண்ட போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது. 


அங்குள்ள ஜுனாகத் மாவட்டம் லோத்வா கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில், ஒரு வயது மதிக்கத்தக்க சிங்கக் குட்டி ஒன்று இன்று தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினரும், மீட்பு படையினரும் கிணற்றில் சிக்கி போராடிக் கொண்டிருந்த சிங்கக் குட்டியை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட சிங்கக் குட்டி, அமராபு விலங்குகள் நல மையத்திற்கு கொண்ட செல்லப்பட்டது.

Night
Day