விவசாய சங்க தலைவர்கள் மீது நடவடிக்கை - ஹரியானா காவல்துறை அறிவிப்பால் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியானா காவல்துறை அறிவித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அம்பாலா போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'டெல்லி சலோ' அணிவகுப்பின் ஒரு பகுதியாக ஷம்பு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற விவசாயிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், பொது மற்றும் அரசு சொத்துக்களை அழித்ததாகவும், அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த மோதல்களில் சுமார் 30 அதிகாரிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக விவசாயத் தலைவர்களிடம் இழப்பீடு கோருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தர், இன்று மாலை அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்து தெரிவிப்போம் எனக் கூறியுள்ளார்.

Night
Day