இந்தியா
ஏக்நாத் ஷிண்டேவே முதலமைச்சராக தொடர வேண்டும்
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நில...
விவிபேட் தொடர்பாக எந்த மனுவையும் விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், VVPAT அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தி கொள்ள முடியும். இந்நிலையில், அனைத்து VVPAT-களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு அண்மையில் விசாரித்த நிலையில், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், விவிபேட் தொடர்பாக எந்த மனுவையும் விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நில...
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் பல ஆண்டு சம்பிரதாயப்படி ந...