விவிபேட் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் வாக்கை செலுத்தியதும் 7 விநாடிகளுக்கு விவிபேட் ஒப்புகை சீட்டில் வாக்காளர் பதிவான தங்கள் வாக்கை சரி பார்க்க முடியும். மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோன்று தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, வாக்கு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர் என்பது கட்டுப்பாட்டு அலகுடன் இணைக்கப்பட்டுள்ளதா? அல்லது ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் நிறுவப்பட்டுள்ளதா? தரவுகள் 40 நாட்கள் சேமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அது 45 நாட்கள் என கூறப்பட்டுள்ளதே என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. மேலும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும் எனவும் தெரிவித்த தேர்தல் ஆணையம். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்." எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Night
Day