வீட்டுக் கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதங்களை எஸ்பிஐ வங்கி அதிரடியாக உயர்த்தியுள்ளது. வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள், லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வங்கியும் நிதி அடிப்படை விகிதத்தை மாற்றி அமைக்கின்றன. இந்த விகிதத்தை பொறுத்தே வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி நிதி கடன் விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day