வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதி மீது 20 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், இதனை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை கருத்தில் கொண்டு வெங்காய ஏற்றுமதி மீதான வரியை திரும்ப பெற்றுள்ள மத்திய அரசு, இவை வரும் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் அறிவித்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Night
Day