வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இன்சாட்-3டிஎஸ்'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்காணிக்‍கும் திறன் கொண்ட இஸ்ரோவின் இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைக்கோள்,  ஜி.எஸ்.எல்.வி., எப்14 என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவி, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வானிலை மாற்றங்களை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை வடிவமைத்தது. மொத்தம் 2 ஆயிரத்து 274 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை, 5:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதனைதொடர்ந்து 253.53 கிலோ மீட்டர் புவி தாழ்வட்ட பாதையில் இன்சாட்-3டிஎஸ்' செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

Night
Day