வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இந்திய ஆய்வு மையத்தை 2035 - க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 'ஸ்பேஸ் டாக்கிங்' எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ் - ஏ மற்றும் பி என 2 சிறிய விண்கலன்களை அந்த ராக்கெட் சுமந்து சென்றது. மேலும் இந்த ராக்கெட்டில் 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதில்  14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ தயாரித்ததாகவும், மீதமுள்ள 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்ததாக கூறப்படுகிறது,

இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், ராக்கெட்டில் இருந்த நான்கு அடுக்குகளும் சரியாக ராக்கெட்டில் இருந்து பிரிந்ததாகவும், குறிப்பாக நான்காவது அடுக்கில் இருந்த இரு விண்கலன்கள் வெற்றிகரமாகப் நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

Night
Day