வெளிநாடுகளைச் சேர்ந்த 14 இடங்களில் இளங்கலை நீட் தேர்வு மையங்கள் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெளிநாடுகளை சேர்ந்த 14 இடங்களில் இளங்கலை நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி நடைபெற உள்ளதாகவும்  554 மையங்களில் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளிநாடுகளிலும் மையம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 12 நாடுகளில் உள்ள 14 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, குவைத், துபாய், அபுதாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

varient
Night
Day