வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு ரூ.5,858.60 கோடி பேரிடா் நிதி விடுவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு 5 ஆயிரத்து 858 கோடி நிதியை விடுவித்துள்ளது.


கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழுக்களை அனுப்பியது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலான நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என மத்திய உள்விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 21 மாநிலங்களுக்கு 14 ஆயிரத்து 958 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day