வோடஃபோன் கட்டணமும் உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் நிறுவனமும் பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், வோடஃபோன் நிறுவனமும், ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டணத்தை 11 முதல் 24 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. பிரீபெய்டில் 28 நாட்கள் வேலிடிட்டிக்கான 1.5 ஜிபி டேட்டா பேக் ரீசார்ஜின் விலை 299 ரூபாயிலிருந்து 349 ரூபாயாகவும், 365 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் 2 ஆயிரத்து 899 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 499 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வருவதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர். 

Night
Day