ஷம்பு எல்லையில் திரண்ட விவசாயிகள் - பெரும்திரளாக டெல்லியை நோக்கி முன்னேறத் திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயலும் விவசாயிகளை தடுக்கும் விதமாக பஞ்சாப்- ஹரியானா எல்லையான ஷம்புவில் நள்ளிரவிலும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.

விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக டெல்லி நோக்கி விவசாயிக்ள் பேரணியாக சென்று வருகின்றனர். பஞ்சாப், அரியானா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் நேற்று பேரணியை தொடங்கினர். இந்நிலையில் கடந்த 2020 மற்றும் 21-ம் ஆண்டுகளில் நடந்ததை போன்று நடந்து விடாமல் இருக்க பஞ்சாப், அரியானா எல்லையில் டெல்லி போலீசார் கடுமையான தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகளை ஷாம்பு எல்லை அருகே தடுத்து நிறுத்திய போலீசார், அவர்கள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முற்பட்டனர். 

இதற்கிடையே, டெல்லி எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், அங்கு பயணிகளின் வாகனங்கள் குவிந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தடுப்புகளுக்கிடையே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால், நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இத்தகைய சூழலில், நள்ளிரவிலும் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். தொடர்ந்து முன்னேறி வந்த விவசாயிகளை பஞ்சாப்- அரியானாவின் ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் ஷம்பு எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Night
Day