ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் தலா 90 தொகுதிகள் உள்ளன. ஹரியானாவில் காங்கிரஸ் - பாஜாக இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை பெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும். 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day