ஹரியானா புதிய முதல்வர் சைனி அரசியல் சட்டத்தை மீறியதாக பொதுநல மனு தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா புதிய முதலமைச்சர் நியமனத்திற்கு எதிராக பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசுக்கு வழங்கிய ஆதரவை 10 எம்எல்ஏக்கள் திரும்ப பெற்ற நிலையில் மனோகர் லால் கட்டார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஹரியானாவின் பாஜக தலைவர் நயா சிங் சைனி முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் எம்பியாக உள்ள சைனி தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இது அரசியல் சாசன சட்டத்தை மீறிய செயல் என்றும், எனவே சைனி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரி பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Night
Day