எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் சரிந்தன. அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் மீதான பண மோசடி குற்றச்சாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவருக்கும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 246 புள்ளிகள் சரிந்து 79 ஆயிரத்து 459 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 84 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 284 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.