ஹேமந்த் சோரன் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒருவரை தொடர்ந்து சிறையில் வைப்பதற்காக குற்றப்பத்திரிகையை மட்டுமே தாக்கல் செய்வது முறையல்ல என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்க ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அல்லது இறுதி குற்றப்பத்திரிகையை 60ல் இருந்து 90 நாட்களில் தாக்கல் செய்ய முடியாத பட்சத்தில் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். தற்போது வரை ஹேமந்த் சோரன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படுவது முறையல்ல என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Night
Day